
மும்மாரி திட்டம்
விவசாயிகளுக்கு உதவுவதே மும்மாரி திட்டத்தின் நோக்கம். இது அவர்களுக்கு தேவையான வளங்கள், நவீன கருவிகள், நீர்ப்பாசன வசதிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் நிதி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது. விவசாய இழப்பீடுகளையும் மும்மாரி திட்டம் ஈடுசெய்கிறது, இதன் மூலம் வேளாண்மை செய்வதில் உள்ள ஆபத்தை குறைக்கிறது. நிலையான மற்றும் லாபகரமான வேளாண்மைக்கு வழிவகுத்து, உணவு உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் இலக்கு.
மும்மாரி திட்டத்தின் நன்மைகள்
மும்மாரி திட்டம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் உதவுகிறது.மேலும் விவரங்களுக்கு, மும்மாரி திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்களை கீழே காணலாம்,
புரொடக்ஷன் வேளாண் உற்பத்தி
நிதி உதவி: நிதி பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு தேவையான நிதி வழங்கப்படுகிறது.
குத்தகை நிலம்: நிலம் இல்லாத விவசாயிகளுக்கு குத்தகைக்கு நிலம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்: சொட்டு நீர் பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு அமைத்து தரப்படுகிறது .
மாதாந்திர ஊதியம்: விவசாயிகளுக்கு மாதம் 8 கிராமுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகிறது .
பயிர் தேர்வு: காலநிலை மற்றும் மண் வளத்திற்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்ய உதவுகிறது.

ஆக்ரோ பிராசசிங் பிசினஸ்
மதிப்பு கூட்டு பொருட்கள்: விவசாய பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
தரமான உணவு: தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கிறது.

அனுபூதி அங்காடி
குறைந்த விலை: குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க உதவுகிறது.
இயற்கை உணவு: இயற்கையான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்குகிறது.

திட்டத்தின் கட்டணம் : 2999 Rs

“மண்ணின் தன்மையை மனிதனுக்கு உணர்த்தும் முன் மாதிரி!”
மும்மாரி திட்டத்தில் சேருவது எப்படி?
மும்மாரி திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும் .
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.