
அனுபூதி திட்டம்
சமூக நலன் திட்டங்களை மேம்படுத்துவதற்காக “அனுபூதி திட்டம்”அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், முதியோர் இல்லங்கள்,குழந்தைகள் காப்பகங்கள், திருநங்கை ஆவணக் காப்பகம்,மாற்றுத்திறனாளிகள் ஆவணக் காப்பகம் போன்ற நிறுவனங்களுக்கு நிதிஆதரவு வழங்குவதன் மூலம், அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும்,விரிவுபடுத்தவும் உதவுகிறது.
அனுபூதி திட்டத்தின் நன்மைகள்
சமூக நோக்க அமைப்பு
அன்னதானம், குழந்தைகள் காப்பகம், மாற்றுதிறனாளி மறுவாழ்வு மையம், முதியோர் இல்லம், திருநங்கையர் மையம் போன்ற அறக்கட்டளைகளுக்கு தேவையான நிதி உதவி வழங்கப்படும்.
ஆலயத்திருப்பணி
தமிழக எல்லைக்குள் பாழடைந்துள்ள பழம்பெறும் 216 ஆலயங்களை தத்துவ பிழையின்றி திருப்பணி செய்து ஊர் மக்களின் வழிபாட்டிற்காக வழிவகை செய்யவும் தமிழகத்தில் உள்ள மாவட்டம் தோறும் பஞ்சபூத தலங்கள் என்று சுமார் 180 சிவ ஆலயங்களையும் 36 பிற ஆலயங்களையும் திருப்பணி செய்வது இந்த திட்டத்தின் நோக்கம்.
ஞானகுருமார்கள்
அனுபூதி தரிசனம் தன்னைத்தானே உணர்ந்து தன் பிறவி நோக்கத்தை நிறைவேற்றி கடமை செய்து கடைத்தேற்றம் அடைய விரும்பும் அனுபூதி ஞான குருமார்களுக்கு சுமார் 2 கோடி செலவில் ஞானாலயம் அமைக்க நிதி உதவி வழங்கப்படும்.
திட்டத்தின் கட்டணம் : 2999 Rs

மனிதனை மகானாக்கும் பேராற்றல்
அனுபூதி திட்டத்தில் சேருவது எப்படி? அனுபூதி திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள்:
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும்
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.